ரணிலை சந்திக்க சென்று வெறுங்கையுடன் திரும்பிய பசில்
பிரதமரை சந்திக்க சென்ற பசில்
இன்று பிற்பகல் 14 பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்திக்க சென்ற பசில் ராஜபக்ச, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
21வது திருத்தச் சட்டம் யாருக்காக கொண்டுவரப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 21வது திருத்தம் தொடர்பில் அரச தலைவருக்கு கூட தெரியாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
21ஆம் திருத்த சட்டம்
21ஆம் திருத்த சட்டம் குறித்து தமக்கும் எதுவும் தெரியாது என பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, 21வது திருத்தத்திற்கு எதிராக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் 21வது திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதனையும் எடுக்காமலேயே இந்த கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
