பாகிஸ்தானின் போர்க் கப்பல் இலங்கையில் இருந்து பயணம்
பாகிஸ்தானின் பி.என்.எஸ் தைமூர் போர்க் கப்பல் வெற்றிகரமாக பயிற்சிகளை நிறைவுசெய்து, இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளது.
பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் யுத்தப் பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது.
பி.என்.எஸ் தைமூரின் வருகை
சீனாவினால் பாகிஸ்தான் கடற்படைக்கென தயாரிக்கப்பட்ட பி.என்.எஸ் தைமூர் கப்பலானது கடந்த 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது.
கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி புறப்பட்ட கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வழமையான பிரியாவிடை வழங்கினர்.
இதன்பின்னர் குறித்த கப்பலானது இன்று சிறிலங்கா கடற்படைக்கு சொந்தமான சிந்துரலா கப்பலுடன் இணைந்து வெற்றிகரமாக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு பயிற்சிகள்
இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிகளை மேற்கொண்டன. இந்த பயிற்சியானது பிராந்திய பங்காளிகள் இயங்குதன்மை, கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுவான கடல்சார் சவால்களுக்கு பதிலளிக்கும் போது வெளிநாட்டு கடற்படைகளுடன் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளவும் இந்த பயிற்சிகள் உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலுக்கு பங்களாதேஷ் அரசாங்கம் அனுமதி மறுத்த பின்னணியில் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை இந்திய தரப்பில் கரிசனைகள் வெளியிடப்பட்டிருந்தன.
