நாமலின் அறிவுறுத்தல்: இன்று முதல் தனது பலத்தை பரீட்சிக்கபோகும் மொட்டு கட்சி
SLPP
Namal Rajapaksa
By Dharu
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 'கிராமம் தோறும்' மக்கள் சந்திப்பு திட்டத்தை இன்று (02) முதல் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்திலை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்திற்கான பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
வாரத்தின் ஐந்து நாட்கள்
இந்தச் சந்திப்புகள் நாடு முழுவதும் வாரத்தின் ஐந்து நாட்கள் நடத்தப்படும் என்றும், இதற்கான ஆரம்ப நிகழ்வு கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் இந்தச் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி