எரிவாயுவைப் பதுக்கி வைப்பதற்கு எதிராக லிட்ரோ முகவர்களுக்கு எச்சரிக்கை
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், தனது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பது, விற்பனையைக் கட்டுப்படுத்துவது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மேல் கட்டணம் அறவிடுவது அல்லது அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டணங்களை விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அந்த எச்சரிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனம் தனது விநியோகஸ்தர் வலையமைப்பிற்கு வழங்கிய ஒரு சிறப்பு அறிவிப்பில் இந்த அறிவுறுத்தல்களை வலியுறுத்தியது.
ஒப்பந்தங்கள் இரத்து
இந்த வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் முகவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிட்ரோ கேஸ் லங்கா மேலும் எச்சரித்துள்ளது.

தேவைப்பட்டால், இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களின் முகவர் ஒப்பந்தங்களை முழுமையாக இரத்து செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை எவ்வித இடையூறுமின்றி, அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |