தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல: டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tamils TNA Douglas Devananda Election
By Laksi May 22, 2024 04:15 PM GMT
Report

 தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட தவறான வழிமுறைகள் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில்  மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈ.பி.டி.பியின் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளே தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் கட்சியின் வேலைத் திட்டங்களும் கருத்துக்களும் பரந்துபட்டளவில் மக்கள் மத்தியில் செல்லும் வகையில் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

 ஒற்றையாட்சி

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், சமஷ்டிதான் வேண்டும் ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வை காணமுடியாது என குழப்பங்களை ஏற்படுத்தித் திரியும் தரப்பினர், இலங்கை ஐனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுத் தான் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல: டக்ளஸ் சுட்டிக்காட்டு! | Point Out The Unitary Structure Douglas

அதேபோன்று இலங்கையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றமானாலும் சரி மாகாண சபையானாலும் சரி ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே நடைபெறுகின்றது.

இத்தனையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் இறைமையை பாதுகாப்பேன் என உறுதிப்பிரமாணம் எடுத்து அதனூடான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு, இன்று ஒற்றையைாட்சி கட்டமைப்பு உள்ள ஒரு நாட்டின் அதிபர் தேர்தலை புறக்கணிப்போம் என ஒருபுறமும் பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்வோம் என இன்னொரு புறமும் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு

 தமிழ் தேசிய கூட்டமைப்பு

உண்மையில் அன்று ஈ.பி.டி.பியின் அதீத வளர்ச்சியை கண்டு அஞ்சியே புலிகள் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதாவது புலிகளின் அச்சுறுத்தல்களால் உயிருக்கு பயந்து ஓடி ஒழித்திருந்தவர்களை எல்லாம் அழைத்து ஒரு மூட்டையாக கட்டிய புலிகள் அமைப்பின் தலைமை தமது அரசியல் செயற்பாடுகளுக்கான கைப்பாவைகளாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தியிருந்தனர்.

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல: டக்ளஸ் சுட்டிக்காட்டு! | Point Out The Unitary Structure Douglas

ஆனாலும் இந்த கூட்டமைப்பின் அரசியல் திட்டத்துக்கு மக்கள் அதிகளவில் செவிசாய்க்காது ஈ.பிடி.பியின் பக்கம் சென்றால் தான் தமது தேவைகளை அடையலாம் என்று மக்கள் அவர்களை நோக்கி செல்வதை தடுக்கமுடியாதவர்களாக, எம்மீது அவதூறுகள், சேறுபூசல்கள் என்ற தாக்கத்தை ஏற்டுபடுத்தவல்ல பிரசாரப் பாணியை புலிகள் கையிலெடுத்திருந்தனர்.

ஆனால் எம்மீதான சேறுபூசல்களை செய்து அன்று அரசியல் இலாபங்களை புலிகள் தரப்பினர் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களை வெற்றியாளர்களாக்குவதில் மட்டுமல்லாது தம்மை பாதுகாப்பதிலும் தோல்வி கண்டுவிட்டனர். மாறாக எமது கொள்கையும் தூரநோக்குடைய பொறிமுறையும் தேசிய நல்லிணக்கமும் வெற்றிகண்டு வருகின்றது.

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு விவகாரம்: சந்தேகநபர் பிணையில் விடுதலை

திரியாய் வைத்தியசாலை குண்டுவெடிப்பு விவகாரம்: சந்தேகநபர் பிணையில் விடுதலை

 தேர்தல் 

நாம் முன்னெடுத்த வழிமுறை சரியானதென்பதால் தான் இன்றும் நாம் களத்தில் இருந்து மக்களுக்கான சேவைகளை செய்ய முடிகின்றது.

தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட சமூகமல்ல: டக்ளஸ் சுட்டிக்காட்டு! | Point Out The Unitary Structure Douglas

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வொரு கதைகளை கூறி மக்களை குழப்புவதிலும் மக்கள் நலன்களிலிருப்பதாக தம்மை காட்டி மக்களது வாக்குகளை அபகரித்து தமது இருப்புக்களை பலப்படுத்திக் கொள்வதுமே இந்த தேசிய சுயநலம் பிடித்த தமிழ் தரப்பினரது செயற்பாடாக இருந்து வருகின்றது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் சீரான போக்குவரத்து வசதியை வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் சீரான போக்குவரத்து வசதியை வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024