பருத்தித்துறை மணற்காட்டில் இன்று அதிகாலை இருவர் கைது
arrest
jaffna
navy
pointpedro
By Sumithiran
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மணற்காடு கரையோரப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா கடற்படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில் 139 கிலோ 930 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவற்றை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்திவந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்கள் பயன்படுத்திய இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவின் பெறுமதி 4 கோடியே 10 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகுகளும் கைது செய்யப்பட்ட இருவரும் மெலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி