இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த நாடு : வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்
போலந்து சார்ட்டர் ஏர்லைன், என்டர் ஏர், இன்று (நவம்பர் 03) இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
Enter Air இன் முதல் விமானம் 206 சுற்றுலா பயணிகளுடன் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் பயணிகள் வரவேற்பு
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் (ஏஏஎஸ்எல்) இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் பயணிகள் வரவேற்கப்பட்டனர்.
இன்று, நவம்பர் 03, 2023 முதல், மார்ச் 2024 இறுதி வரை போலந்திலிருந்து தொடர்ச்சியான விமானங்கள் இயக்கப்படும்.
ஒவ்வொரு 10 நாட்களுக்கும்
ஒவ்வொரு 10 நாட்களுக்கும் தொடர் விமானங்களின் சேவை இருக்கும் என்றும், இது Green Holidays Center (Pvt) Limited உடன் இணைந்து செயல்படுவதாகவும் AASL தெரிவித்துள்ளது.
Enter Air என்பது போலந்தின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனம் மற்றும் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய விமான நிறுவனம் ஆகும்.