சமூக ஊடகங்கள் ஊடாகப் பாலியல் துன்புறுத்தல்: சந்தேக நபரைத் தேட காவல்துறை கோரிக்கை
முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் ஊடாகப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல முறைப்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக சம்மாந்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் மறைந்திருக்கும் இடம் இதுவரை கண்டறியப்படாததால் கைது செய்ய முடியாமல் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அஹமட் லெப்பை முஹம்மது அஸ்லம் எனப்படும் 47 வயதுடைய நபரே இவ்வாறு தேடப்பட்டு வருகிறார்.
பொதுமக்களிடம் கோரிக்கை
இவர் சாய்ந்தமருது 16, அலீம் வீதி, இலக்கம் 478/A1 என்ற முகவரியில் வசித்து வந்தவர் எனப் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் இரண்டு புகைப்படங்களையும் காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், அவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் வழங்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
- சம்மாந்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591162
- சம்மாந்துறை காவல் நிலையம்: 067-2260222
சந்தேக நபர் தொடர்பான தகவல்களை மேற்கண்ட இலக்கங்கள் ஊடாகப் காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |