ட்ரம்புக்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவு: கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகளோ அல்லது அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மாற்றங்களோ, ஈரானின் தற்காப்பு உத்தியை மாற்றப்போவதில்லை என ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானிய தேசத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டுள்ள நீண்டகால விரோதப் போக்கை அவை குறைக்கப்போவதில்லை என்றும் காமேனி கூறியுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
வாஷிங்டனின் நிலைப்பாடு
“அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவைத் தொடர்ந்து, வாஷிங்டனின் நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அமெரிக்காவிடம் விட்டுக்கொடுப்புகளைச் செய்வது ஒரு பெரும் தவறான கணக்கீடு.
ஆதிக்க மனப்பான்மை கொண்ட இந்த அமைப்பு தனது நடத்தையை மாற்றிக்கொள்ளும் என்றோ, அல்லது அதன் அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்றோ யாராவது இன்னும் சிறிதளவாவது நம்பிக்கை கொண்டிருந்தால், அல்லது அமெரிக்காவிடம் விட்டுக்கொடுப்புகளைச் செய்வதன் மூலம் ஈரானிய தேசத்திற்கு எதிரான அதன் விரோதப் போக்கை கைவிடச் செய்ய முடியும் என்று யாராவது கருதினால், அவர்கள் மிகப்பெரிய தவறைச் செய்கிறார்கள்.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து கொள்கை மாற்றங்களை எதிர்பார்ப்பது, கடந்த கால பாடங்களைப் புறக்கணிப்பதற்குச் சமம். அத்தோடு ஈரானின் தேசிய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட வெற்றிகளை இது பலவீனப்படுத்தும் என காமேனி வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |