ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கடத்தல் சம்பவம்- பிரதான சூத்திரதாரி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொப் மாலி என அழைக்கப்படும் சமிந்த தப்ரேவ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிடிய பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பேருவளை கடற்பரப்பில் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த பாரிய கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபரான இவர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரது புகைப்படத்தை பகிரங்கப்படுத்தி பொதுமக்களின் உதவி கோரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.