தென்னிலங்கை தனியார் வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு - தொடரும் கைது வேட்டை
arrest
colombo
grenade
sr Lanka
lanka hospital
By Kalaimathy
நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, குருணாகல், மஹவ பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 18 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.