காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி வீட்டில் தடை உத்தரவை ஒட்டிய காவல்துறையினர்(படங்கள்)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவியின் வீட்டில் நீதிமன்ற தடை உத்தரவை காவல்துறையினர் ஒட்டிச்சென்றுள்ளனர்.
வடக்குகிற்கு விஜயம் செய்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு வவுனியாவிற்கு செல்லவுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
அந்த வகையில் தான், வவுனியாவில் அமைந்துள்ள வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றாவின் வீட்டிற்கு தடை உத்தரவை வழங்குவதற்காக காவல்துறையினர் சென்றிருந்தனர்.
அவர் வீட்டில் இல்லாதபோது அவரது உறவினர்கள் தடை உத்தரவை வாங்குவதற்கு மறுத்திருந்தனர்.
இதனையடுத்து அவரது வீட்டில் தடை உத்தரவு பத்திரத்தை காவல்துறையினர் ஒட்டிச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |