ரணிலின் யாழ் வருகை: போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    SL Protest
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
பிணையில் விடுதலை
இதேவேளை நான்கு பேரிடமும் காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பெற்றுவிட்டு காவல்துறையினர் பிணையில் விடுவித்தனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        