தடுப்பூசி பெற காத்திருந்த மக்கள் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல் - வெளியானது காணொளி
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையத்திற்கு வருகை தந்த மக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
வெலிகம – கல்பொக்க பகுதியில் நேற்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக பெருமளவிலான மக்கள் சமூகமளித்திருந்தனர். எனினும், வருகை தந்த மக்களுக்கு செலுத்துவதற்கு போதுமானளவு தடுப்பூசிகள் இல்லாமையினால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வருகை தந்த வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், அங்கிருந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
எனினும், சிலர் மீது அங்கிருந்த உயர் அதிகாரியொருவர், தனது கையிலிருந்த பொல்லொன்றால் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு தாக்குதல் நடத்தும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
The HQI of the Weligama police in action.
— Rehaan Jayawickreme(RJ)රෙහාන් ජයවික්රම (@RehanJayawick) September 2, 2021
This was during a vaccination drive in Weligama Today. @SriLankaPolice2 #lka#weligama #COVID19 pic.twitter.com/yF2VvFDAXY