தமிழர் பிரதேசங்களில் தொடரும் காவல்துறையினரின் அடாவடி : எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை
காவல்துறையினர் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா (Sri Bhavanandaraja) தெரிவித்துள்ளார்.
சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (28) இடம்பெற்றது.
இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் அடாவடிகள்
இதன்போது ஊடகவியலாளர்கள், “அண்மை காலமாக காவல்துறையினர் அடாவடிகள் அதிகரித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட காவல்துறையினர் நெல்லியடியில் ஒரு வீட்டுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகி இருந்தது.
இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றீர்கள் ?” என கேள்வியெழுப்பியிருந்தனர்.
போதிய அறிவுறுத்தல்கள்
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், “ காவல்துறையினருக்கு போதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருந்தாலும் காவல்துறையினர், சில இடங்களில் தாங்கள் நினைத்தபடிதான் நடந்துகொண்டு இருக்கின்றனர்.
அவர்களது செயற்பாடுகள் பிழையாக இருந்தால் அந்த காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
