விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வியப்பை ஏற்படுத்திய திருநாவுக்கரசின் தகவல்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உங்களைச் சந்திக்கவுள்ளதாகவும் அதனுடைய நிலைப்பாடு பற்றி அந்தக் கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்சேகா அரசறிவியல் துறை ஆசானான மு.திருநாவுக்கரசிடம் கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மு.திருநாவுக்கரசு, “ரோகண விஜயவீரவை (Rohana Wijeweera) சந்திப்பதில் எனக்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை ஆனால் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்வாராக இருந்தால் உடனடியாக சந்திக்கின்றேன் என பொன்சேகாவிடம் சொல்லியனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் கட்சியின் அமைப்பாளர் மீண்டும் திரும்பி வரவும் இல்லை. அந்தச் சந்திப்பு இடம்பெறாமல் அப்பிடியே நிறுத்தப்பட்டது. இதன்மூலம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாட்டில் ரோகண விஜயவீர இருக்கவில்லை என்பது புலப்பட்டது.
அத்துடன் அதே நாளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த மு.திருநாவுக்கரசு “ரோகண விஜயவீரவிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது நான் அதனை நிராகரித்து விட்டேன். அவர்கள் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை” என தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், ''மழை கார் இருட்டானாலும் மந்தி கொப்பிழக்க பாயாது“ என்று எந்தச் சூழ் நிலையிலும் நாங்கள் எதையும் இழந்துவிட மாட்டோம் என்று சொல்லிவிட்டு கடந்த செல்கின்றார்.
இது இவ்வாறிருக்கையில் சிறையில் இருக்கக்கூடிய அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) வெளிப்படுத்திய தகவல் சற்று முரணாகவும் தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கின்ற விடயமாகவும் இருக்கின்றது.
அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாக தீர்மானிக்கக் கூடிய விடயமல்ல. அவை சாத்தியப்படுவது கடினம், நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என குறிப்பிட்ட அவர் தற்போது சிறையிலுள்ள யாவரும் வெறும் சந்தேக நபர்கள் அல்ல. நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். அவர்களை விடுதலை செய்ய முடியாது. முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும் என தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் குரல்களும் உத்தரவாதங்களும் ஒலித்தன.
நீண்ட காலமாக தகப்பனுக்காக ஏங்குகின்ற குழந்தைகளும், கணவனுக்காக ஏங்குகின்ற மனைவிகளும், குழந்தைகளுக்காக ஏங்குகின்ற தாய்மார்களும் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது.
அத்துடன் தமிழ் மக்களுக்கு அநுர தரப்பிலிருந்து தொடர்ச்சியாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது குறித்த மேலும் பல விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
