தமிழர் பகுதி கடலில் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்
முல்லைத்தீவில் (Mullaitivu) கடலில் அடித்து செல்லப்பட்ட யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நாயாற்று கடற்பகுதியில் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது.
இருட்டுமடு, உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.
அவர்கள், நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் 47, 21 வயதுடைய இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசாரணை
இந்நிலையில், மற்றைய யுவதி காணாமல் போனதை தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் கொக்குளாய் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
