கடமை முடிந்து தங்குமிட விடுதிக்கு சென்ற பெண் பொலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த துயரம்
police
chain
duty over
By Jaso
கடமை முடிந்து தனது விடுதிக்கு சென்று கொண்டிருந்த பெண் பொலிஸ் பரிசோதகரின் தங்கச் சங்கிலியை ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.
கொழும்பு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடமிருந்தே சங்கிலி அபகரிக்கப்பட்டள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடமை முடிந்து கொழும்பு 15 பொலிஸ் தங்குமிட விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பின் சென்ற சந்தேகநபர் இவ்வாறு தங்கச் சங்கிலியை பறித்து களவாடிச் சென்றுள்ளார்.
சங்கிலியின் பெறுமதி 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்