பொதுமக்களுடனான மோதல் -துப்பாக்கிசூடு நடத்திய காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Sumithiran
காவல்துறை -பொதுமக்கள் மோதல்
காலி மாவட்டத்தின் பலப்பிட்டிய பிரதேசத்தில் காவல்துறை பொதுமக்கள் இடையே மோதல் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
இன்று மாலை பலப்பிட்டிய அருகே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
பொதுமக்களில் குடிபோதையில் இருந்த சிலர் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்த போதே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும், அதன் போது இரண்டு காவல்துறையினர் காயமுற்றுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் பொதுமக்களை கலைந்து போகச் செய்யும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்