காவல்துறை ஊரடங்குச்சட்டம் சட்டவிரோதம்- சட்டத்தரணிகள் சங்கம் கொதிப்பு
ஊரடங்கு அறிவிப்பு சட்டவிரோதம்
இவ்வாறு விடுக்கப்பட்ட அறிவிப்பு ‘சட்டவிரோதமானது மற்றும் மக்களின் அடிப்படை உரிமை மீறல்.’என சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலபட்ட பென்டி ஆகிய இருவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமது அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தவறிய கோட்டாபயவிற்கும் அவரது அரசுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
எனவே தமது ஜனநாயக அடிப்படை உரிமையை நிலைநாட்ட மக்கள் அமைதியான முறையில் முன்வரவேண்டும்.
அத்துடன் சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தை உடனே திரும்ப பெறவேண்டுமென நாம் காவல்துறை மா அதிபரிடம் கேட்டுக் கொள்கின்றோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

