பேருவளையில் அவசர பரிசோதனை: காவல்துறையினர் அதிரடி
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
பேருவளை மீன்பிடி துறைமுகம் மற்றும் அதனை சூழவுள்ள வீட்டுத் தொகுதிகள் இன்று (19) காவல்துறையினால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருவளை, பயாகல, அளுத்கம, வெலிப்பன்ன ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு காவல்துறை உத்தியோகத்தர்களும் கட்டுகுருந்த பயிற்சி முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சோதனை
இந்நிலையில், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பேருவிலிருந்து புறப்பட்டு திரும்பும் பெருமளவிலான கப்பல்கள் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி