கட்டுநாயக்கவில் வெளிநாட்டு வர்த்தகர் ஒருவர் அதிரடி கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 5.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கைக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டு வர்த்தகர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் இன்று (19) அதிகாலை 12.55 மணியளவில் வருகை தந்த 36 வயதுடைய பங்களாதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு பிடிபட்டுள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொருட்கள் ஏதுமற்ற பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி வழியாக வெளியேற முயன்ற போதே அங்கிருந்த சுங்க அதிகாரிகள் இவரை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
விதிக்கப்பட்ட அபராதம்
இதன்போது குறித்த நபரின் கைவசமிருந்த இரண்டு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 170 சிகரெட் அட்டைகளும், அவற்றிலிருந்து 34,000 வெளிநாட்டு சிகரெட் துண்டுகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பான ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த நபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |