யாழ் புத்தூரில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
யாழ்ப்பணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து அடையாளம் காணப்படாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தூர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எதிர் புத்தூர் மெதடிஸ் மிசன் பாடசாலை பின் பக்கத்தில் உள்ள குளம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அடையாளம் காண முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
கிளிநொச்சி
கிளிநொச்சி, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள காடொன்றிற்குள் இருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மரண பரிசோதனை இன்று (19) நடைபெறவுள்ளதுடன், கிளிநொச்சி காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20