உத்தரவை மீறி பயணித்த கார்! காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்
Gampaha
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மினுவாங்கொடை, யாகொடமுல்ல பகுதியில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, குறித்த காரும் அதில் பயணித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மினுவாங்கொடை பகுதியில் காவல்துறையினரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகம்
இதன்போது, தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தின் சாரதி காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரைச் செலுத்த முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்