பாடசாலை மாணவனிடம் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் : காவல்துறை அதிர்ச்சி
மாவத்தகம பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவரிடம் இருந்து புகைபிடிக்கும் இலத்திரனியல் சாதனம் (ஈ சிகரெட்) காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“யுக்திய” வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் மாவத்தகம காவல் நிலைய கட்டளைத் தளபதி பிரதான காவல்துறை பரிசோதகர் நிஷாந்த ஹெட்டியாராச்சிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தினமும் பையை வைக்கும் மாணவன்
மாணவன் தினமும் பாடசாலைக்கு செல்லும் போது, தான் கொண்டு வரும் பையை பாடசாலைக்கு அருகில் உள்ள வீட்டில் வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளரான பெண் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பையை ஆய்வு செய்த போது, மின்னணு புகை சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. பாடசாலை முடிந்ததும் உரிய பையை எடுத்துச் செல்ல சாதாரண உடையில் வந்த மாணவனிடம் நடத்திய விசாரணையில் அது பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜவுளிக்கடை ஒன்றில் வியாபாரி ஒருவரிடம் இருந்து
மாவத்தகமவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வியாபாரி ஒருவரிடம் இருந்து இதனை கொள்வனவு செய்ததாக மாணவன் கூறியதன் பிரகாரம் கடையை சோதனையிட்ட காவல்துறையினர் அதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 2 இலத்திரனியல் புகை சாதனங்களை கண்டெடுத்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வர்த்தகர் அந்த உபகரணங்களில் ஒன்றை மாணவனுக்கு 6,500 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், குறித்த தொழிலதிபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த மேலதிக தகவலின்படி, இதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 2 இலத்திரனியல் புகைபிடிக்கும் கருவிகள் பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தகரின் நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 வெற்றுப் பெட்டிகளில் முன்பு எலக்ட்ரோனிக் ஸ்மோக்கிங் கருவிகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 10 பெட்டிகள் ஒரே பெட்டியில் அடைக்கப்பட்டிருப்பதும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த
வர்த்தகரின் நண்பரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாணவனின் பெற்றோரை வரவழைத்து கடுமையாக எச்சரித்த காவல்துறையினர், அந்த மாணவன் மிகவும் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், இந்த மின்னணு புகை சாதனத்தை அந்தப் பாடசாலையை சேர்ந்த மற்றொரு குழுவினர் சேர்ந்து பணம் சேகரித்து வாங்கியது தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |