காவல்துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதி குறித்து வெளியான அறிவிப்பு
காவல்துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதிகளை ஐந்து வருடங்கள் வரை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கறுவாத்தோட்டம் மற்றும் ஹெவ்லொக் டவுண் போன்ற இடங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான விடுதிகளில் குடியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் பெரும்பாலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே குறித்த குடியிருப்புகளை காலி செய்கின்றனர்.
இந்தநிலையில், அவ்வாறான குடியிருப்பு ஒன்றில் காவல்துறை அதிகாரியொருவர் குடியிருக்கும் கால எல்லையை ஐந்து வருடங்களாக மட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுநிருபத்தின் நோக்கம்
இது தொடர்பில் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சகல காவல்துறை மா அதிகாரிகளுக்கும் தங்கள் பிள்ளைகளை உயர்பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்தச் சுற்றுநிருபத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
