அதிர வைத்த துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர் தொடர்பில் பிரதி பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
புதிய இணைப்பு
புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த பிரதி அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
புதுக்கடை நீதிமன்ற நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் (National Hospital of Sri Lanka) சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர்
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கனேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இதன்போது நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
🚨 Police have identified the shooter from CCTV footage—he was seen walking inside the high-security Hulftsdorp Court Complex before opening fire. A massive manhunt is underway to capture him pic.twitter.com/1G94Cdcpry
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) February 19, 2025
துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கனேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

