பிரித்தானிய தற்காலிக விசாவால் சிக்கலில் உக்ரேனிய அகதிகள்
பிரித்தானியாவில் (United Kingdom) தற்காலிக விசா வழங்கப்படுவது குறித்து உக்ரேனிய (Ukraine) அகதிகள் கவலை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரேனிய அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒரு தொண்டு நிறுவனம் பிரித்தானிய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தனது முழுமையான படையெடுப்பை பிப்ரவரி 2022 அன்று தொடங்கியதை தொடர்ந்து, Ukraine Permission Extension Scheme (UPE) மூலம் அகதிகள் 18 மாதங்கள் வரை தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

நகரப்போகும் 2025 இல் ஏற்படபோகும் பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புக்கள்
உள்துறை அமைச்சு
ஆனால், இது நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கவில்லை.
இது குறித்து பதிலளித்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, உக்ரைன் அரசின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் போருக்குப் பிறகு தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.
அத்தோடு, பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை விரும்புவோருக்கு வேறு வழிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நிரந்தர குடியுரிமை
Bosnian அகதிகள் நிரந்தர குடியுரிமை பெற்றது போல், இது குறித்து போருக்குப் பிறகு விவாதித்து முடிவு செய்யலாம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) என தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2025, அரசு விசா விதிகளை மாற்றி உக்ரைனிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிரித்தானியாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்தது.
UPE விசா மூலம் 18 மாத நீட்டிப்பு கிடைக்கின்ற நிலையில், உக்ரேனிய அகதிகள் நிரந்தர குடியுரிமை பற்றிய நிச்சயத்தன்மை இல்லாமை காரணமாக கவலையடைந்துள்ளனர்.
இந்தநிலையில், அரசு இந்த விசாக்களை எதிர்காலத்தில் மதிப்பீடு செய்யும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்