பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சாரதிகளுக்கு காத்திருக்கும் சவால் : காவல்துறையின் அறிவிப்பு
பண்டிகைக் காலம் நெருங்குவதையடுத்து போக்குவரத்து சோதனைகளையும் நடவடிக்கைகளையும் மேலும் தீவிரப்படுத்தப் போவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளரான காவல்துறை பிரதி காவல்துறை மா அதிபர் (டி.ஐ.ஜி.) டபிள்யூ. பி. ஜே. சேனதீர, போதைப்பொருள் போதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளைக் கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, மது அல்லது போதைப்பொருளை உபயோகித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
போதையைக் கண்டறியத் தேவையான சுவாசப் பரிசோதனைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் காவல் நிலையங்களுக்குப் போதுமான அளவில் வழங்கப்பட்டுள்ளன என்றும் டி.ஐ.ஜி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடத்துவதற்கும், விபத்து ஏற்பட்டால் போதைப்பொருள் பயன்பாட்டைச் சோதிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பண்டிகைக் காலத்தில் விபத்துக்களைக் குறைப்பதற்காகப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மது அல்லது போதைப்பொருளை உபயோகித்துவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு பிரதி காவல்துறை மா அதிபர் சாரதிகளைட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |