கணவன்,மனைவி குழந்தைகள் என நால்வர் எடுத்த விபரீத முடிவு -தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sumithiran
கணவன் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் என நான்கு பேர் விஷம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தசம்பவம் ரம்புக்கனை பத்தம்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது போல் நடித்து

கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்துவிட்டு, மருந்து கொடுப்பது போல் நடித்து இரு குழந்தைகளுக்கும் விஷத்தை ஊட்டியுள்ளனர்.
27 வயதான தாய், 28 வயதான தந்தை, இரண்டு மகள்கள், (நான்கு வயதுடைய ஒருவரும் மற்றைய ஆறு மாத கைக்குழந்தையும்) விஷம் அருந்தியதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசேட விசாரணை

இவர்கள் விஷம் அருந்தியமைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி