நத்தார் பண்டிகையினை கொண்டாடவிருந்த குடும்பம்: மரண வீடாக மாறிய துயரம்
ஹட்டன் - ஆரியகம பகுதியில் வீடு ஒன்று தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த குடும்பத்தில் உள்ளவர்கள் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு பொருட்கள் கொள்வணவு செய்வதற்காக ஹட்டன் நகரத்திற்கு சென்றிருந்தனர்.
குறித்த நேரத்திலட வீட்டில் திடீரென தீபற்றி எரிந்துள்ளது. இதனால் வீட்டிலிருந்த நபர் பலியாகியுள்ளார்.
பலியான நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒய்வு பெற்ற ஆசிரியர் தேசி சமுவேல் (வயது-74) என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
பிரதேச மக்கள் தீயினை கட்டுபாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




