ஏரல் எடுக்க சென்ற இளைஞன் கடலில் மாயம் - முல்லைத்தீவில் பரபரப்பு
Mullaitivu
Sri Lanka Police Investigation
By pavan
முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
கடல் நீர் ஏரியில் இன்று (20) காலை ஏரல் எடுக்க சென்ற இளைஞன் ஒருவர் நீர் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 வயதுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
தேடும் நடவடிக்கை
இவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கடல் சீற்றம் காரணமாக உடலம் இதுவரை கிடைக்கவில்லை.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி