பொலிஸாரின் அனைத்து விடுமுறைகளும் இரத்து - நீடிக்கப்படுமா பயணத்தடை?
srilanka
police
leave
ajithrohana
By Jaso
நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதனால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகளை அடுத்து பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண உறுதி செய்துள்ளார்.
கொரோனா பயணத்தடை, தனிமைப்படுத்தல் சட்டம், கொரோனா கட்டுப்பாட்டு செயல்களுக்கு பொலிஸாரின் சேவை மிகவும் அவசியம் என்பதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த அறிப்பை அடுத்து ஜூன் 14ம் திகதிவரை நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற பொது மக்களின் சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்