தெற்கில் பாதாள உலகத்தை ஒடுக்க களமிறக்கப்பட்டது புதிய படையணி
தென் மாகாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் கித்சிறி ஜெயலத் தலைமையில் புதிய காவல்துறை மோட்டார் சைக்கிள் தாக்குதல் பிரிவு இன்று (27) தொடங்கப்பட்டது.
மாத்தறை கோட்டையில் உள்ள மகிந்த விஜேசேகர விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இந்தப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
80 புதிய மோட்டார் சைக்கிள்கள்
மேலும் 600 எஞ்சின் திறன் கொண்ட 30 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 80 புதிய மோட்டார் சைக்கிள்கள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
குற்றம் நடந்தவுடன் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றம் நிகழும் முன் விழிப்புடன் இருந்து அவர்களைத் தடுக்கவும், போக்குவரத்து விபத்துகளைக் குறைக்க உடனடி வாகன சோதனைகளை மேற்கொள்ளவும் இந்தப் பிரிவின் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


