சொத்து மோசடியில் சிக்கிய பெண் காவல்துறை அதிகாரி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Shalini Balachandran
மில்லியன் கணக்கிலான சொத்து மோசடி வழக்கில் முன்னாள் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அதிகாரி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதையடுத்து, குற்றவியல் மற்றும் நிதி குற்றப் புலனாய்வுத் துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்பு, நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மே ஒன்பதாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி