யாழில் போதையில் பொதுமகனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
மதுபோதையில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ். (jaffna) குறிகட்டுவான் பகுதியில் நேற்று முன்தினம் (24) இரவு பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை (Kayts) காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்திருந்தார்.
பொதுமகனிடம் இலஞ்சம்
இதன்போது வீதியால் சென்ற பொதுமகனிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த உத்தியோகத்தரை ஊர்காவற்துறை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
ஆள் பிணை
குறித்த காவல்துறை உத்தியோகத்தரை தலா ஒரு இலட்சம் பெறுமதியிலான இரண்டு ஆள் பிணைகளில் செல்வதற்கு அனுமதியளித்திருந்தார்.
அத்துடன் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |