காவல்துறை உத்தியோகத்தரின் அடிதடி -பணியிலிருந்து நீக்கப்பட்டார்
காவல்துறை கான்ஸ்டபிளை உதைத்து காயப்படுத்தி அவரது கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மஹாபா காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இரகசியமாக இசைக்கச்சேரி பார்க்க
மஹாபா காவல் நிலையத்தில் கடமையாற்றும் இந்த கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு ஆஜராகி பட்டியலில் இடம்பெற்று பின்னர் சாதாரண உடையில் யாருக்கும் தெரிவிக்காமல் கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை காண சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சக உத்தியோகத்தரை தாக்கி கைபேசி திருட்டு
அங்கு கச்சேரி பாதுகாப்புக்காக சீருடையில் வந்த பயகம காவல்துறையின் பயிற்சிக் காவலர் ஒருவருடன் குறித்த கான்ஸ்டபிள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையால் உதைத்து காயப்படுத்திவிட்டு அவரது செல்போனைத் திருடிச் சென்றார்.
சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி காவல்துறை அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
