காவல்துறை அதிகாரிகளின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சேவையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே ஆனந்த விஜேபால இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளது.
சீருடையில் மாற்றம்
காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது, இது ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.

காவல்துறை அதிகாரிகளின் தோற்றத்தை மாற்றுவதுடன் மட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் நின்றுவிடவில்லை.
சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும் அதனை மக்கள் நட்புறவுடையதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |