கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் காயம்
கொழும்பு (Colombo) - கிராண்ட்பாஸ் பகுதியில் காவல்துறையின் உத்தரவை பின்பற்றாமல் சென்ற கார் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று மாலை (23.01.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த காரை கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவில் சோதனைக்காக நிறுத்த காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் காரை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில், காரில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட காரில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்தறையினர் முன்னெடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலதிக செய்திகளுக்கு ஐபிசி தமிழின் மதிய நேர செய்திகளை காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |