இலங்கை வந்த அமெரிக்க வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலை : வெறுங்கையுடன் நிற்கும் அவலம்
அளுத்கமவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 1.45 மில்லியன். திருடப்பட்டமை தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அமெரிக்க பிரஜையான ஆன்ட்ரூ கிறிஸ்டோபர் லூகாஸ்(Andrew Christopher Lucas) என்பவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹோட்டலுக்கு வந்த சுற்றுலா பயணி
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், சுற்றுலாப் பயணி மே 23 அன்று ஹோட்டலுக்கு வந்தார். மேலும் 24 ஆம் திகதி அதிகாலை 4:20 மணியளவில், அவர் தனது அறையின் திறந்த திரை வழியாக யாரோ வருவதைக் கண்டு எழுந்தார்.
உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
காணாமற்போன டொலர்கள் மற்றும் இலங்கை ரூபா
பின்னர், லூகாஸ் ஹோட்டல் ஊழியர்களுக்கு அறிவித்து முழுமையான சோதனையை மேற்கொண்டார்.இதன்போது அவரது பையில் இருந்த 4,000 அமெரிக்க டொலர்கள், 210,000 இலங்கை ரூபாய்கள், அவரது கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை காணவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |