காவல்துறை தம்பதியின் வீட்டில் தங்கம் மற்றும் பணம் கொள்ளை
காவல்துறை தம்பதி வீட்டில் கொள்ளை
காவல்துறை அதிகாரி தரத்திலான கணவன் மனைவிக்கு சொந்தமான வீட்டிற்குள் புகுந்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை திருடிய நபர் அல்லது குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
அநுராதபுரம் காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி மற்றும் இப்பலோகம காவல்துறையில் பணிபுரியும் காவல் பரிசோதகர் ஆகியோருக்கு சொந்தமான, கொட்டல்பத்த, தலாவ வீதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடர்களால் உடைக்கப்பட்ட வீடு
முறைப்பாடு செய்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவியான காவல்துறை உத்தியோகத்தர் ஆகியோர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, நேற்றுமுன்தினம் (14ம் திகதி) அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், வீடு திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டின் அலுமாரியில் இருந்த இரண்டு தங்க வளையல்கள், இரண்டு பென்டன்கள், பச்சை குத்தி, பத்தாயிரம் ரூபா பணத்தை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.