இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன்படி குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக
சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
ஹிக்கடுவை காவல் நிலைய பொறுப்பதிகாரி - 071 - 8591457 ஹிக்கடுவை காவல் நிலையம் - 091 - 2277222
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி