வவுனியாவில் கோர விபத்து - காவல்துறை சார்ஜன்ட் பரிதாபமாக பலி
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் வவுனியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்து
வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் 45 வயதுடைய வவுனியா காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.