யாழில் வாள், கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்பு: காவல்துறையினர் தீவிரம்
யாழில் வாள் , நீளமான கத்தி தயாரிக்கும் இடங்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக, யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு
அத்தோடு, கூலிக்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பான விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மஞ்சுள செனரத் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அவர், கூலிக்காக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் செயற்பாட்டை தாம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |