தனது இரட்டை குழந்தைகளையே பணத்திற்காக விற்ற தாய்: நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு
Sri Lankan Peoples
Ministry of justice Sri lanka
By Dhilak
இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்து இரண்டு பிள்ளைகளையும் பணத்திற்காக விற்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் நேற்று(8) தலா ஒரு லட்சம் ரூபாவின் படி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரண்டு குழந்தைகளையும் தன்னால் ஏற்க முடியாது என்று குறித்த குழந்தைகளின் தாய் கூறியுள்ளார்.
குழந்தைகளின் நிலைமை
அதன்படி இரண்டு குழந்தைகளையும் சிறுவர் நன்னடத்ததை காப்பகத்தில் வைத்திருக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கை ஜனவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அத்தோடு, கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |