தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்: விவசாய அமைச்சர் அதிரடி
Mahinda Amaraweera
Sri Lankan Peoples
By Dilakshan
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் தரமற்ற தேங்காய் எண்ணெயை சந்தையில் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கபடுமென விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தின நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதன்போது, சிறிய ஆலை உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வெளியிடப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுகர்வோருக்கு அறிவிப்பு
இந்நிலையில், உற்பத்திகளை தரப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தை தயாரிக்கும் போது இது குறித்து நுகர்வோருக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்