வவுனியாவில் மதுபானசாலைகளுக்குள் களமிறங்கிய பொலிஸார்! உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை
sri lanka
vavuniya
people
By Shalini
வவுனியாவில் விதிமுறைகளை மீறி திறந்திருந்த மாதுபானசாலைகளை பொலிசார் பூட்டியுள்ளனர்.
நேற்று இரவு முதல் எதிர்வரும் 3 தினங்கள் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று தினங்கள் மூடப்படவுள்ளதால் மதுபானசாலைகளுக்கு முன்னால் அதிகளவிலான குடிமக்கள் கூடியிருந்தனர்.
இதனால் மாலை 6 மணிக்கு மதுபானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இதனையடுத்து, மதுபானசாலைகளுக்குள் களம் இறங்கிய வவுனியா பொலிசார் உடனடியாக மதுபானசாலைகளை மூடுமாறு பணித்ததுடன், மதுபானசாலை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்