நீதிமன்றம் முன் விபத்து ஏற்படும் வகையில் செயற்படும் காவல்துறையினர்
வவுனியா நீதிமன்றம் முன்பாக விபத்து ஏற்படும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் செயற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா நீதிமன்றம் முன்பாக கடமையில் நிற்கும் போக்குவரத்து காவல்துறையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை செய்வதுடன் தாம் நிற்கும் திசைக்கு எதிர் திசையில் வரும் வாகனங்களையும் திடீரென வீதியை குறிக்கிட்டு வாகனத்தை மறித்து அவர்களது ஆவணங்களை சோதனை செய்து வருகின்றார்.
ஆவணங்களை காவல்துறையினர் சோதனை செய்வது சரியானதெனினும், குறித்த பகுதியில் சனநெரிசலுக்கு மத்தியில் வானம் செல்லும் போது திடீரென வாகனங்களை மறிப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளது.
எனவே, இது தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுளளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |