முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Police Sri Lankan Peoples Gun Shooting
By Jaso Nov 01, 2026 10:38 AM GMT
Report

நிறுத்துமாறு உத்தரவிட்டும் நிற்காமல் சென்ற முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம்,காவல்துறையினர் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள காவல்துறையினர், தங்களை நிறுத்துமாறு பணித்த உத்தரவை மதிக்காமல் சென்ற முச்சக்கர வண்டி மீது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

சட்டத்திற்கு மதிப்பளிக்கும் குடிமகனாக இருக்க வேண்டும்

 குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் முயற்சியில், பொதுமக்கள் சட்டத்திற்கு மதிப்பளித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்தப் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு | Police Urge Public To Obey Law

"நீங்கள் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் குடிமகனாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், குற்றச் செயல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒக்டோபர் 31 அன்று கடவத்த, மஹகட சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அங்கு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்த முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

பலப்படுத்தப்படும் கண்காணிப்பு: அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள் நிறுவ திட்டம்

பலப்படுத்தப்படும் கண்காணிப்பு: அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கெமராக்கள் நிறுவ திட்டம்

நிறுத்தாமல் சென்றதால் துப்பாக்கிசூடு

காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வாகனங்கள் மற்றும் நபர்களைச் சோதனையிடும் பணியின் போது இந்த முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது. ஆனால், சாரதி வாகனத்தை அதிகாரிகளை நோக்கிச் செலுத்திவிட்டு, பின்னர் அங்கிருந்து வேகமாகச் சென்றுள்ளார்.

முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறையினர் விடுத்துள்ள அறிவிப்பு | Police Urge Public To Obey Law

இதன்போது, ​​வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அந்தச் சிறுவனின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதியிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினாலேயே அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முச்சக்கர வண்டியைச் செலுத்திய 17 வயதுடைய சாரதி, கடவத்த காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். கோனஹேனவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த முச்சக்கர வண்டியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

திலீபனின் நினைவாலயத்தை அகற்றுமாறு காவல்துறை உத்தரவு : கஜேந்திரன் கடும் கண்டனம்

திலீபனின் நினைவாலயத்தை அகற்றுமாறு காவல்துறை உத்தரவு : கஜேந்திரன் கடும் கண்டனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019