தென் பகுதியில் அரங்கேறவுள்ள கொலைகள்: காவல்துறையின் எச்சரிக்கை!
தென் மாகாணத்தின் கந்தர பகுதியில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, கந்தர காவல்துறை வட்டாரத்தில் இன்றிலிருந்து எதிர்வரும் 72 மணித்தியாலத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என நம்பகமான புலனாய்வுத் தகவல்களை காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சிலருக்கு காவல்துறை பாதுகாப்பு லழங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்
கந்தர பகுதியில் இருக்கும் தெஹிபாலே என்ற திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் மூலமாகவே இந்தக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது இந்த தெஹிபாலே என்பவர் துபாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் பகுதியில் பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் அவர் மூலம் அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிலருக்கு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கந்தர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெவுந்தர கொலை
தெவுந்தர தேவாலயத்திற்கு முன் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தே கந்தர பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதன்போது கொல்லப்பட்ட யோமேஸ் என்பவரின் அண்ணன் நேற்று முன்தினம் (12.11.2025) அங்குனுகொலபெலஸ்ஸ அதி பாதுகாப்பு சிறைச்சாலையில் கழுத்து வெட்டி கொலை செய்ய முயற்சித்த போது தப்பிய நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பொற்றோர்களும் ஊடகங்களில் இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |